ரஜினி 165-ன் புதிய செய்தி என்ன தெரியுமா?

  திஷா   | Last Modified : 08 Jul, 2018 02:21 am

rajini-165-update

பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என இன்னும் தெரியவில்லை. 

ரஜினியின் 165-வது படமான இதன் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங்கில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தனது ஒரு படம் ரிலீஸ் ஆனதும் கொஞ்சம் கேப் விட்டு விட்டு அடுத்தப் படத்தைத் தொடங்கும் ரஜினி, காலா படம் ரிலீஸ் நாளின் போது கார்த்திக் சுப்பராஜின் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை மதுரையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறதாம். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close