ஆர்யாவை காப்பாற்றுமா‘கஜினிகாந்த்’?  

  Bala   | Last Modified : 08 Jul, 2018 10:41 am

arya-s-gajinikanth-movie-release-date

’கஜினிகாந்த்’ படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது, இந்தப் படம் தனக்கு கை கொடுக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார் ஆர்யா.

ராகவன் இயக்கத்தில் வந்த ‘கடம்பன்’ படம் ஆர்யாவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்தப் படம் ரிலீஸாகி, ஒரு வருடத்துக்கு மேலாகியும் ஆர்யாவின் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. இதற்கிடையே, ’நம்ம வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் போனார் ஆர்யா.  

இந்நிலையில், ஆர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கஜினிகாந்த்’ படம்  ரிலீசுக்கு தயாராகி விட்டது. வரும் 27-ம் தேதி படம் வெளிவருமென அறிவித்துள்ளனர். இதனால் மிகவும் உற்சாகமாகியிருக்கும் ஆர்யா, இந்தப் படம் தனக்கு கை கொடுக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார். 

’கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடித்திருக் கிறார். கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயரித்திருக்கும் இந்தப் படத்தை ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close