தல அஜித்- தளபதி விஜய்: உண்மையில் யார் டாப்..? ஆதாரம் உள்ளே..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 08 Jul, 2018 02:11 am
thala-ajith-thalapathi-vijay-who-is-really-the-top

கமல், ரஜினிக்குப் பிறகு யார்? என்கிற கேள்வி எழுந்தபோது, ‘’விஜய்க்கு மனசுல பெரிய ரஜினின்னு நினைப்பு... அஜித்துக்கிட்ட அப்படி என்ன இருக்கு? இவனுங்கௌல்லாம் 2 வருஷத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியாது." எனப்பேசப்பட்டது.  20 ஆண்டுகளுக்கு முன் கோடம்பாக்கத்தில் விஜய், அஜித்தின் நிலை இதுதான்.

எத்தனையோ சவால்கள், எத்தனையோ சோதனைகள். அனைத்தையும் தாண்டி கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களாக விஜயும், அஜீத்தும் பிடித்து விட்டனர். ஆனால் இப்போதைய நிலையில் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டுவது விஜயும், அஜித்தும் ரஜினியை பின்னுக்குத் தள்ளி விட்டனர். சமூக வலைதளங்களில் இந்த மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கிடையே பெரும் யுத்தம் அரங்கேறி வருகிறது. அவ்வப்போது இவர்களின் யுத்தத்தை வைத்து சில செய்தி நிறுவனங்கள் யாருக்கு மாஸ்? என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு எரிகிற நெய்யில் எண்ணெய் வார்த்து வருகின்றன. 

சமூக வலைதளங்களில் இவருக்கும் சமமான ஆதரவு இருந்து வந்தாலும் உண்மையில் யார் மாஸ்..? அஜீத் ரசிகர்கள் ’தல’ என்பார்கள். விஜய் ரசிகர்கள் ‘தளபதி’ எனக் கூறுவார்கள். பொது ஜனங்களோ இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் விழி பிதுங்குவார்கள்.  அஜித், விஜய் ரசிகர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சார்பு தன்மையற்று இதற்கு விடைகாண வேண்டுமானால் அவர்களின் கடைசி ஐந்து படங்களின் வசூல் விபரத்தை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம். 

தளபதி விஜய் நடித்த கடைசி படம் மெர்சல் ரூ 254 கோடி வசூல் செய்து மெகா ஹிட் வரிசையில் இடம்பிடித்தது. அதற்கு முன் வந்த பைரவா- ரூ 111 கோடியை வசூலித்து தோல்வியை தழுவியது. ரூ. 152 கோடியை வசூலித்த தெறி  சூப்பர் ஹிட். ரூ 90 கோடியை மட்டுமே வசூலித்த புலி படுதோல்வியடைந்தது. கத்தி- ரூ 124 கோடியை திரட்டி ஹிட் லிஸ்டில் இணைந்தது. 

கடைசியாக வெளிவந்த அஜீத் படம் விவேகம். இந்தப்படம் ரூ 125 கோடியை மட்டுமே ஈட்டி தோல்வி கண்டது. அதற்கு முன் ரிலீசான வேதாளம்- ரூ 125 கோடியை குவித்து மெகா ஹிட் லிஸ்டில் இணைந்தது. அதற்கு முன் வந்த என்னை அறிந்தால்- ரூ 95 கோடிகளை வசூலித்து சுமார் படமாக சுருண்டது. ரூ. 70 கோடியை  திரட்டிய வீரம் ஹிட் லிஸ்டில் இணைந்தது. ஆரம்பம் படம் ரூ 90 கோடிவசூலித்து முதலுக்கு மோசம் வைக்காமல் ஓடியது.

கடைசி ஐந்து படங்களை வைத்து பார்த்தால் விஜய் 2 மெஹா ஹிட் படங்களையும் கத்தி ஹிட்லிஸ்டிலும், இரண்டு தோல்வி படங்களையும் வழங்கியுள்ளார். அஜீத் கடைசி ஐந்து படங்களில் ஒரு மெஹா ஹிட் படத்தையும், ஒரு ஹிட் படம், இரண்டு சுமாரான படங்களையும், ஒரு தோல்வி படத்தையும் கொடுத்துள்ளார்.

 

விஜய் 5 படங்களின் மொத்த வசூல் ரூ. 731 கோடி. அஜீத்தின் கடைசி ஐந்து படங்கள் வசூலித்த தொகை ரூ.505 கோடி.  இருவருக்கும் சமமான ரசிகர்கள் இருந்தாலும் வசூலில் யார் மாஸ்? என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்..!  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close