ரஜினி, கமலையும் விட்டு வைக்காத தமிழ்படம் 2 குழு

  Newstm News Desk   | Last Modified : 08 Jul, 2018 08:49 am

tamil-padam-2-team-releases-new-poster-trolling-rajini-s-kaala

தொடர்ந்து பல படங்களை கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வரும் தமிழ் படம் 2 படக்குழு தற்போது கமல், ரஜினியின் பக்கம் திரும்பி உள்ளது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள படம் தமிழ்படம்-2. இதன் முதல் பாகம் அடைந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இப்பட வேலைகள் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வரும் அப்டேட்ஸ்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதுவரை 15க்கும் மேற்பட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ள தமிழ் படம் குழு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நடிகர்களை கலாய்த்து வருகின்றனர். இதில் தற்பேது ரஜினியும் கமலும் சிக்கி உள்ளனர். 


ரஜினியின் காலா படத்தை கலாய்க்கும் வகையில் நடிகர் சிவா டைனோசரை தடவிக்கொடுத்தப்படி அமர்ந்திருக்கும் போஸ்டரும், விஷ்வரூபம் கமல் கெட்டப்பில் நகைச்சுவை நடிகர் சதீஷ் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது. 

மேலும் 4 டிவி விளம்பரங்கள் அடங்கிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close