'காலா' லாபம் தான்: வதந்திகளுக்கு பதிலளித்த தனுஷ்!

  Newstm Desk   | Last Modified : 08 Jul, 2018 09:32 am
dhanush-clarification-on-kaala-box-office

காலா படம் நஷ்டம் அடைந்துவிட்டதாக வெளியான செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி இரண்டாவது முறையாக நடித்திருந்த படம் காலா. இந்த படம் சென்ற மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில், காலா படம் நஷ்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளர் தனுஷ் செட்டில் செய்ய முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பலரும் ரஜினியையும் தனுஷையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். 

தற்போது அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் தனுஷ் அவரது வுண்டர்பார் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், காலா படம் குறித்து பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் முரண்பாடு உள்ளது. காலா படம் வுண்டர்பார் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டித் தந்த வெற்றியடைந்த படம். இதற்காக சூப்பர் ஸ்டாருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close