பிக் பாஸைவிட்டு வெளியேறுவேன் - கமல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jul, 2018 01:53 pm

actor-kamal-haasan-said-that-i-will-leave-the-bigg-boss-show

பிக் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி வெளியில் சுற்றுவது உண்மை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டே சென்று விடுகிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் வீட்டில் உள்ள 15 போட்டியாளர்களும் வெளியுலக தொடர்பு இல்லாமல், செல்போன், டிவி இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்நிலையில், பிக் பாஸ்- 2 போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி சாலிகிராமம் பகுதியில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்,  "100 நாட்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர் வெளியில் செல்ல முடியாது. இது வெறும் வதந்தி. பொன்னம்பலத்தை பார்த்ததாக சொல்பவர்கள் ஏன் போட்டோ எடுத்து வெளியிடவில்லை? பொன்னம்பலம் வெளியே சுற்றுவது உண்மையாக இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறிருகிறேன்" என சூடாகத் தெரிவித்துள்ளார்.                


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close