கடைசிக்கட்ட படப்பிடிப்பில் அதர்வாவின் '100'

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 11:23 pm

atharva-s-100-movie-final-schedule-started

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் 100 படம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 

இயக்குநர் பத்ரி இயக்கத்தில் அதர்வா நடித்த செம போத ஆகாத படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அதர்வாவின் இமைக்கா நொடிகள், ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்த, பூமராங் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. மேலும் டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். 

100 என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. தற்போது கடைசி கட்டப்படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அதர்வா போலீஸ் கெட்அப்பில் கச்சிதமாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றரன். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close