பேரன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வெளியீடு!

  திஷா   | Last Modified : 09 Jul, 2018 04:56 pm

peranbu-official-first-look-promo

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்.  வித்யாசமான கதைக்களத்தில் இயல்பாக பயணிப்பது இவரது ஸ்டைல். தற்போது பேரன்பு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருது வாங்கிய சாதனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் இந்தப் படம் இரு மொழிகளில் உருவாகியுள்ளது. 

ராமின் ஆதர்ச இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் வேலைகள் முடிந்து விட்ட நிலையில், பல சர்வதேச விழாக்களுக்கும் அனுப்பி வருகின்றனர் பேரன்பு படக் குழுவினர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோவை தற்போது ரிலீஸ் செய்திருக்கின்றனர் படக்குழுவினர். அதில் சீனா உள்ளிட்ட நாடுகளின் நடந்த ஸ்கிரீனிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், சீன மக்கள் இயக்குநர் ராமை வெகுவாக பாராட்டுகின்றனர். 

தவிர, படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை வரும் 15-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவினர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close