நான்காவது முறையாக இணையும் சிம்பு - ஜோதிகா!

  திஷா   | Last Modified : 09 Jul, 2018 02:16 pm

simbu-acting-with-jyothika-again

திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா, தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பெண்களை முன்னிலைப் படுத்தும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி' ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். 

இதில் காற்றின் மொழி படத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா நடிக்க, விதார்த் மற்றும் தெலுங்கு நடிகை லக்‌ஷ்மி மஞ்சு முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தியில் வித்யாபாலன் நடித்த 'துமாரி சுலு' படத்தின் ரீமேக் தான் இந்த காற்றின் மொழி. 

தற்போது படத்தைப் பற்றிய சூடான தகவல் என்ன தெரியுமா? இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சிம்பு நடிக்கிறாராம். அவர் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப் பட்டுள்ளன. இதற்கு முன் சரவணா, மன்மதன் என இரண்டு படங்களில் சிம்புவும் ஜோதிகாவும் ஜோடியாக நடித்துள்ளனர். 14 வருடம் கழித்து இந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி என இரண்டு படங்களில் மீண்டும் ஜோவுடன் இணைந்திருக்கிறார் சிம்பு.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close