கார்த்தி ஜோடியாகிறார் நிவேதா பெத்துராஜ்

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 11:09 am

nivetha-pethuraj-to-act-with-karthi-in-his-next

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு அவர் இயக்குநர் மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் அவரும் கார்த்தியும் இணைந்துள்ள இந்த படத்தில் 2 நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். முதலாவதாக நிவேதா பெத்துராஜ் இந்தபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். மேலும் மற்றொரு நாயகி கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அல்லது சயிஷாவிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close