பாலியல் சர்ச்சையில் மாட்டிக் கொண்ட தமிழ் இயக்குநர்

  திஷா   | Last Modified : 09 Jul, 2018 09:30 pm

tamil-film-director-s-name-in-sri-reddy-s-list

தெலுங்கு திரையுலகினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் ஶ்ரீ ரெட்டி. வாய்ப்பு கேட்டுப் போகும் நடிகைகளை தவறாக பயன்படுத்திக் கொண்ட திரையுலகினர் மீது அடுத்தடுத்து புகார்களை கிளப்பி தெலுங்கு சினிமாவை ஆட்டிப் படைத்தார். 

அதோடு ஶ்ரீ லீக்ஸ் என்ற ஹேஸ் டேக்கில் பல வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மற்றும் படங்களையும் லீக் செய்தார். தமிழ் சினிமாவில் பிரபலமான 'சுச்சி லீக்ஸ்' கூட ஓரிரு நாட்களில் ஓய்ந்தது. ஆனால் இந்த ஶ்ரீ லீக்ஸ் பல மாதங்களாக தன் வேலையை செய்துக் கொண்டே தான் இருக்கிறது. 

ஶ்ரீ ரெட்டியின் இந்த லிஸ்டில் தெலுங்கின் முன்னணி நடிகர் ராணாவின் தம்பி, அபிராம் டகுபதி முதல் நடிகர் நானி உட்பட பல பிரபலங்கள் சிக்கினர். இவற்றிற்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், தேவையான போது அவற்றை வெளியிட தான் தயாராக இருப்பதாகவும் ஶ்ரீ ரெட்டி ஏற்கனவே கூறியிருந்தார். 

இந்நிலையில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு இயக்குநரும் தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக அடுத்த குண்டை தூக்கிப் போட்ட ஶ்ரீ ரெட்டி, விரைவில் அவரது பெயரை அறிவிப்பேன் எனவும் திகில் கிளப்பியிருக்கிறார். தற்போது யாரந்த இயக்குநர் என்ற தேடல் தான் கோலிவுட்டில் தீயாய் பற்றி எரிகிறது...
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close