ஒரு வழியாகத் தொடங்கும் நிவின் பாலி - நயன்தாராவின் படம்

  திஷா   | Last Modified : 10 Jul, 2018 12:07 am

love-action-drama-to-start-rolling-on-july-14

நேரம், பிரேமம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நிவின் பாலி. தற்போது காயங்குளம் கொச்சுன்னி, மூதோன் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். 

கடந்த வருடம் இவர் நடிப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்ட படம் 'லவ் ஆக்‌ஷன் ட்ராமா'. மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகரும், எழுத்தாளருமான ஶ்ரீநிவாசனின் இரண்டாவது மகன் தியான் இதில் இயக்குநராகக் களம் இறங்குகிறார். தியானின் அண்ணன் வினீத் ஶ்ரீநிவாசன் தான் 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்ற படத்தில் நிவினை அறிமுகப் படுத்தினார். அண்ணன் வழியைப் பின்பற்றி தியானும் தனது முதல் படத்தில் நிவினை கமிட் செய்திருக்கிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். 

தினேஷ் என்ற கதாபாத்திரத்தில் நிவினும், ஷோபா என்ற கேரக்டரில் நயனும் நடிக்கிறார்கள். ஷான் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். 

கடந்த வருடம் செப்டம்பரில் தொடங்குவதாக அறிவிக்கப் பட்ட இந்த லவ் ஆக்‌ஷன் ட்ராமா சில காரணங்களால் தள்ளிப் போனது. இந்நிலையில் வரும் 14-ம் தேதி சென்னையில் இதன் ஷூட்டிங் தொடங்கப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close