’சிக்கலில்’ தமிழ்படம் 2 - 12ம் தேதி ரிலீஸ் ஆகுமா?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Jul, 2018 12:25 pm

trouble-in-release-of-tamil-padam-2

வரும் 12ம் தேதி வெளியாவதாக இருந்த நடிகர் சிவா நடித்துள்ள தமிழ்படம் 2 ரிலீசாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

2010ல் மிர்ச்சி சிவா நடிக்க, சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த தமிழ்படம் தமிழ்திரையுலகை கலாய்த்து எடுக்கப்பட்டு இருந்தது. அந்தப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் கூட்டணியே இதிலும் கைகோர்த்துள்ளது. இரண்டாம் பாகத்தில் சினிமாத்துறையினரை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையும், நடப்பு விஷயங்களையும்  கலாய்த்துள்ளனர்.

ரஜினி, கமல், விஜய் அஜித் தொடங்கி, இன்னும் ரிலீசாகாத சர்கார் புகைப்பட போஸ்டரையும் விட்டுவைக்கவில்லை. இதனால், இந்தப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எகிறி உள்ளது. இதனையடுத்து, ’யு’ சான்றிதழை பெற்றுள்ள படக்குழு 12 தேதி படம் ரிலிஸாகும் என அறிவித்துள்ளது. இதனால், தினம் ஒரு படத்தை கலாய்த்து போஸ்டரை வெளியிடுகின்றனர்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் பட வெளியீட்டு குழு என்ற அமைப்பை உருவாக்கி இருந்தனர்.  ரிலிஸாகும் அத்தனை படமும் அந்த அமைப்பில் ஒப்புதல் வாங்க வேண்டும் என்பது விதி. ஆனால் தமிழ்படம் 2விற்கு இன்னும் அந்த அமைப்பு ஒப்புதலை அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழ்படம் 2 குழு ரிலிஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

இதனால், தமிழ்படம்-2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தினரிடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நக்கல், அட்ராசிட்டி, மரணகலாய் என சினிமா பிரபலங்களை வறுத்தெடுத்த தமிழ்படம் 2 வெளியாவதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close