வெளியானது சிம்பு - வெங்கட் பிரபு படத்தின் டைட்டில்!

  திஷா   | Last Modified : 10 Jul, 2018 12:23 pm

str-venkat-prabhu-title-has-announced

இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது பார்ட்டி படத்தை இயக்கி வருகிறார். ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, ரெஜினா உட்பட பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். இதனையடுத்து சிம்புவை வைத்து இவர் தனது அடுத்தப் படத்தை இயக்கவிருப்பதாக கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகின. இதனை வெங்கட் பிரபுவும் உறுதி செய்தார். 

சமீப காலமாக சிம்புவுக்கு சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. வெங்கட் பிரபுவின் இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை இன்று காலை 11 மணிக்கு அறிவிப்பதாக ஏற்கனவே வெங்கட் பிரபு சொல்லியிருந்தார். அதன்படி தற்போது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப் பட்டிருக்கிறது. 'மாநாடு' என படத்திற்கு பெயரிடப் பட்டுள்ளது. மாநாட்டு பந்தல்களில் அரசியல் வாதிகளுக்கு வைக்கப் படும் பேனர்களின் நிழற்படம் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. சமீப காலங்களில் அரசியலை முன் வைத்து நிறைய படங்கள் இயக்கப் படுகின்றன. அதன்படி சிம்பு - வெங்கட் பிரபுவின் இந்தப் படமும் அரசியல் படமாகத்தான் இருக்கும் என்பதை டைட்டிலே உறுதி செய்கிறது. 

அதோடு இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு வருகிறதாம். எனினும் இன்னும் ஹீரோயின் இறுதி செய்யப் படவில்லை. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close