பிரபுதேவாவின் 'லக்‌ஷ்மி' படத்துக்கு  'யு' சான்றிதழ்!

  Bala   | Last Modified : 10 Jul, 2018 03:53 pm

prabhu-deva-s-lakshmi-film-gets-u-certificate

பிரபுதேவாவின் 'லக்‌ஷ்மி' படத்துக்கு  'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. 

’தேவி’ படத்துக்குப் பிறகு நடனப்புயல் பிரபு தேவாவும், இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இணைந்திருக்கும் படம் லக்‌ஷ்மி. இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். பேபி தித்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். நடனத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் சூப்பராக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இசைக்கும், நடனத்துக்கும் கதையில் பெரும் பங்கு இருப்பதால் கதையின் தன்மையை உணர்ந்து இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்களை வைத்துள்ளனர். 

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டியுள்ளனர். படத்தைப் பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள், ’லக்‌ஷ்மி’ படத்தைப் பாராட்டியதோடு படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்திற்கு ஒரு ’வெட்டு’ கூட இல்லாமல் ’யு’ சான்றிதழ் கிடைத்திருப்பது லக்‌ஷ்மி படக் குழுவுக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்திருப்பதாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close