இப்போதைக்கு சண்டக்கோழி-2 ரிலீஸ் இல்லை! லிங்குசாமி ட்வீட்

  Bala   | Last Modified : 10 Jul, 2018 05:09 pm

sandaikozhi-2-release-date

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’சண்டக்கோழி 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

நடிகர் விஷாலை மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியதில் ’சண்டக் கோழி’படத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது. விஷால், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து, லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ல் வெளிவந்து ஹிட் அடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது தயாராகிவிட்டது.

மீண்டும் விஷால் - லிங்குசாமி கை கோர்த்துள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். நடிகை வரலட்சுமி இன்னொரு நாயகியாக வருகிறார். மேலும் சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’மூலம் தயாரிக்கிறார். விஷாலின் 25-வது படமான 'சண்டக்கோழி-2' படத்தை வரும் அக்டோபர் 18-ல் ஆயுத பூஜையையொட்டி திரைக்குக் கொண்டு வர இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை படத்தின் இயக்குநர் லிங்குசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 18ல் படத்தை வெளியிடுவதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கொடுத்த அனுமதி கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதை விஷால், கீர்த்தி சுரேஷ் என பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close