மீண்டும் இணையும் ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார்!

  Newstm News Desk   | Last Modified : 11 Jul, 2018 01:40 am

rajini-s-next-film-is-with-k-s-ravikumar

கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு பிறகு ரஜினி அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

'காலா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு அவர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதாக ரஜினியே தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக முத்து, படையப்பா, லிங்கா உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்தை இயக்கி இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close