எல்லாமே நான் தான் - டி.ஆர்-ன் புதிய படம் பற்றிய பகீர் அறிவிப்பு

  பால பாரதி   | Last Modified : 10 Jul, 2018 06:21 pm

t-rajendar-announced-new-movie

இதுவரை பதுங்கியிருந்த டி.ராஜேந்தர், இப்போது பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார்! அவர், ’இன்றைய காதல் டா’ என்கிற புதிய படத்தை அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவுக்கு  ’ஒரு தலை ராகம்’, ’ரயில் பயணங்களில்’, ’என் தங்கை கல்யாணி’, ’ஒரு தாயின் சபதம்’, மும்தாஜ் அறிமுகமான ’மோனிசா என் மோனலிசா’, சிம்பு அறிமுகமான ’காதல் அழிவதில்லை’ போன்ற இளமை துள்ளும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் டி.ராஜேந்தர். இவரது படங்களில் இளமையான காதலுக்கும், தங்கை சென்டிமென்டும் அதிக முக்கியத்துவதுவம் இருக்கும்! அவர், கடைசியாக ’வீராசாமி’ என்கிற படத்தை  இயக்கி நடித்தார். நடுவே, அரசியலில் பிஸியானார்! பிறகு முழுநேர நடிகராகவும், பாடகராகவும் மாறினார். பல படங்களில் பாடிய அவர், ’கவண்’ படத்தில் முக்கிய காதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில், நீண்ட நாட்களாக பதுங்கியிருத்த டி.ராஜேந்தர், இப்போது பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார்! ’இன்றைய காதல் டா’ என்கிற புதிய படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், இயக்கம், தயாரிப்பு என சகலத்தையும் ஏற்றுள்ளார். 

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க இளமை துள்ளும் காதல் கதையாக உருவாகிறது. இதில் புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இதில் ’லேடி டான்’ ஆக வருகிறார் நமிதா! மேலும் ராதா ரவி, வி.டி.வி.கணேஷ், இளவரசன், பாண்டு, ஜெகன், கொட்டச்சி, மதன்பாப், தியாகு, ரோபோ சங்கர்  என ஒரு நட்சத்திரப் பட்டாளமே உள்ளது!

இன்று காலை அவரது இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ’இன்றைய காதல் டா’ படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் டி.ராஜேந்தர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close