'நட்புனா என்னன்னு தெரியுமா?' அப்டேட்ஸ்

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 11:42 am

natpuna-ennanu-theriyuma-movie-updates

ரம்யா நம்பீசன் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘நட்புனா என்னன்னு தெரியுமா?’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர்  அறிவித்துள்ளனர். 

வேட்டையனாக சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ‘விஜய் டிவி’ புகழ் கவின் பெரியதிரையில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘நட்புனா என்னன்னு தெரியுமா?’ இதில், நாயகன் கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன்  நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 

நட்பை மையப்படுத்திய இந்தப் படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ‘நட்புனா என்னன்னு தெரியுமா?’ படம் வரும் ஜூலை 20-ந் தேதி ரிலீஸ் ஆவதாக படக்குழுவினர்  தெரிவித்துள்ளனர். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close