ஹன்சிகாவின் புதிய த்ரில்லர் படம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 01:40 am

hansika-s-new-thriller-movie

நடிகை ஹன்சிகா மோத்வானி த்ரில்லர் படமொன்றில் நடிக்கிறார்.

தனுஷ் ஜோடியாக ’மாப்பிள்ளை’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, குறுகிய காலத்திலேயே விஜய், ஜெயம் ரவி, பிரபு தேவா, உதயநிதி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றார். 

தமிழில் ஒரு ரவுண்ட் வந்த ஹன்சிகா, தெலுங்கு திரையுலகத்தையும் ஒரு கலக்கு கலக்கினார். முன்னணி நாயகிகள் பலருக்கு ’டஃப்’ கொடுப்பார் என எதிர்பார்த்த போது, திடீரென ஹன்சிகாவுக்கு மார்க்கெட் போனது! சொல்லி வைத்த மாதிரி தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதற்கு அவரது உடல் வாகும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது! ஆகவே, கொழுக் மொழுக்கென இருந்த தனது உடலை, கடுமையான உடற் பயிற்சிக்குப் பிறகு குறைத்திருக்கிறார் ஹன்சிகா! இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது! கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஹன்சிகா!  

ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த யூ.ஆர்.ஜமீல் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜியோஸ்டார் எண்டர்பிரைஸ் சார்பில் எம்.கோடீஸ்வர ராஜு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.  
இன்னும் டைட்டில் முடிவாகாத இந்தப் படத்தின் முன் கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் ஹீரோவாக நடிக்கப் போகும் நாயகன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர். 
 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close