’விஸ்வரூபம் 2’-வின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்! 

  Bala   | Last Modified : 11 Jul, 2018 01:39 am

kamal-a-big-announcement-to-viswaroopam-2

’விஸ்வரூபம் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்!  

கமல்ஹாசன் தனது சினிமாப் பயணத்தில் மறக்க முடியாத பல படங்களைக் கொடுத்திருந்தாலும், அவரின் வாழ்நாளில் மிக முக்கியமான, மறக்கவே முடியாத படமாக இருக்கிறது ’விஸ்வரூபம்’! கமல் நடித்து, இயக்கி, தயாரித்த ’விஸ்வரூபம்’ படம்,  பல  போராட்டங்களை கடந்து, தடைகளை தவிடு பொடியாக்கி 2013-ல் வந்தது!  

ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ’விஸ்வரூபம் 2’படத்தை உருவாக்கியிருக்கும் கமல், அரசியல் என்ட்ரி,  ’பிக்பாஸ்’ நிகழ்ச்சி போன்ற காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் இல்லாமலே இருந்தார். இப்படி இழுத்துக் கொண்டே போன, ’விஸ்வரூபம் 2’ படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இப்போது முழு மூச்சாக இறங்கியிருக்கிறார் கமல். சமீபத்தில் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் நடுவே ’விஸ்வரூபம் 2’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட்ட கமல், வரும் ஆகஸ்ட் 10-ந்தேதி ’விஸ்வரூபம் 2’ படம் ரிலீஸ் ஆகுமென அறிவித்திருந்தார். அதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவர இருக்கும் ’விஸ்வரூபம் 2’ படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையை ஹோம் ஸ்கிரீன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.     
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close