தமிழ் படத்துக்கு தடைவிதித்த இலங்கை!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 07:23 pm

sri-lankan-banned-for-the-film-balachandran

பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து உருவான 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness In Heaven) படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து ’சாட்சிகள் சொர்க்கத்தில் ‘ என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை ஈழன் இளங்கோ என்பவர் இயக்கியிருக்கிறார். ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்பட வில்லை!’ என்று ஏற்கெனவே கூறியிருந்தார் இயக்குநர் ஈழன் இளங்கோ.

ஆனால், இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் வாழும் மக்களின் சோகக்கதைகள் இதில் காட்சியாக்கப் பட்டுள்ளது. அதோடு, Channel 4-ல் சாட்சிகளோடு எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட பல ஆவணங்களும் செய்திகளும் இப்படத்தில் தேவை அறிந்து சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், பாலசந்திரனும், இசைப்ரியாவும் திரையில் தோன்றும் காட்சிகளும் உள்ளன. 

இந்நிலையில், இலங்கையில் இப்படத்தை திரையிடுவதற்காக கடந்த மார்ச் 19 அன்று சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் படக்குழுவினர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், ’இதில் வரும் செய்திகளும், துணைக் கதைகளும், பல இடங்களில் வரும் வசனங்களும், ஒரு பாடலும், மிகவும் உணர்ச்சிகரமாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் உள்ளது’ என கூறி, இப்படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close