த்ரில்லர் பின்னணியில் ஒரு ரொமாண்டிக் படம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 01:30 am

a-romantic-movie-in-the-background-of-thriller

சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் த்ரில்லர் பாணியில் ’எம்பிரான்’ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.

’முன்தினம் பார்த்தேனே’, ’தடையறத் தாக்க’ போன்ற  திகில் மற்றும் சஸ்பென்ஸ் - மிஸ்டரி வகை திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு  கொடுத்த இயக்குநர் மகிழ் திருமேனியின் சிஷ்யரான கிருஷ்ணா பாண்டி, தனது குருநாதரைப் போலவே சஸ்பென்ஸ் கலந்த ரொமாண்டிக் த்ரில்லர் பின்னணியுள்ள ’எம்பிரான்’ என்கிற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதில் புதுமுகங்கள் ரஜீத் மேனன், ராதிகா பிரீத்தி, பி.சந்திரமௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பஞ்சவர்ணம் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு எம்.புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, ப்ரசன் பாலா இசையமைக்க, கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ’எம்பிரான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close