முதல் படத்தில் எனக்கு வந்த சோதனை - கே.பாக்யராஜ் ’பகீர்’!

  பால பாரதி   | Last Modified : 11 Jul, 2018 01:45 am

santhosathil-kalavaram-movie-audio-release-function

'சந்தோஷத்தில் கலவரம்' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் முதல் படத்தின் போது தனக்கு வந்த சோதனைகளை சொன்னார் கே.பாக்யராஜ்.

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி தயாரிக்கும் படம் 'சந்தோஷத்தில் கலவரம்'. இதில் புதுமுகங்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி ஆகியோர் நடித்திருக்கின் றனர். வில்லன் நடிகர் ரவி மரியா முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்தப் படத்துக்கு சிவநக் இசையமைக்க, கபிலன், மணி அமுதன், ப்ரியன்  ஆகியோர் பாடல்களை எழுத, அறிமுக இயக்குநர் கிராந்தி பிரசாத் இயக்கி யிருக்கிறார்.

'சந்தோஷத்தில் கலவரம்' படத்தின் ஆடியோவை கே.பாக்யராஜ் வெளியிட்டுப் பேசுகையில்,”பல போராட்டங்களுக்கும், சோதனைகளுக்கும் பிறகு இந்தப் படத்தை எடுத்து முடித்திருப்பதாக சொன்னார்கள். கஷ்டப் படாமல் எதுவும் கிடைக்காது, அப்படிக் கிடைக்கும் வெற்றி நிலைக்காது! நானும் பல சோதனைகளைக் கடந்து தான் வந்திருக்கிறேன். நான் முதல் முதலா அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை செய்த ‘16 வயதினிலே’ படத்தின் முதல் ஷெட்யூல் ஒரு மாதம் பிளான் செய்துகொண்டு கர்நாடகாவுக்குப் போனோம். ஆனால், போன வேகத்திலேயே ’பேக் அப்’ ஆகி திரும்பினோம். எங்க டைரக்டர் டென்ஷனாவே இருந்தார், ’இவன்லாம் சேர்ந்த ராசி தானோ..’ என நினைப்பாரோனு அவர் கண்ணுல படாமலே இருந்தேன். 

அதேமாதிரி, நான் முதல் முதலா இயக்கி, ரெண்டாவது ஹீரோவா நடித்த ’சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் பூஜை அன்று, அந்தப் படத்தில் நடிக்க வந்த ஒரு நடிகருக்கு தீடீர்னு வாந்தி பேதியாகி, என்னைய பீதி ஆக்கிட்டார். நான் டைரக்டர் ஆன அந்த சந்தோஷத்தைக் கூட முழுசா அனுபவிக்க முடியல, அந்தாளுக்கு எதுவும் ஆகிற கூடாது! என நான் வேண்டாத கடவுள் இல்லை!” என்றார்.
newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close