2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு: இந்த முறையாவது வெளியாகுமா?

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 11:27 am

2-0-release-date-announced

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் வரும் நவம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2010 ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் வெளியான படம் எந்திரன். இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் வசூல் ரிதீயாகவும் பெரும் சாதனைப்படைத்தது. இதனையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் இதே கூட்டணியில் உருவானது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் ஸ்பெஷல் எஃப்பெக்ட்ஸ் பணிகள் முடியாமல் இருந்ததால் ரிலீஸ் தள்ளி போனது. 

இந்நிலையில் படத்தின் இயக்குநா் சங்கா் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு வழியாக விஃஎப்எக்ஸ் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக அந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனவே படம் வருகிற நவம்பா் 29ம் தேதி வெளியிடப்படும்" என்று தொிவித்துள்ளாா். மேலும் இந்த பதிவுடன் மிரட்டலான போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த தேதியிலாவது படம் சொன்னப்படி வெளியாகுமா என்ற கேள்வி ரஜினி ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. 

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close