கன்னடத்தில் வில்லனார் விஜய்சேதுபதி!

  Bala   | Last Modified : 11 Jul, 2018 05:12 pm

vijay-sethupathi-who-makes-a-comeback-in-the-kannada-film-world

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி, இன்னொரு படத்திலும் தனது வில்லன் நடிப்பைத் தொடருகிறார்.

’நடிச்சா ஹீரோ சார்..!’ என்றெல்லாம் அடம் பிடிக்கும் பழக்கம் விஜய் சேதுபதியிடம் இல்லை! கதையின் தேவையை வைத்து  முதியவராகவும், நடுத்தர வயதுக்காரராகவும் கூட நடிக்கத் தயாராக இருப்பார்! தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய்சேதுபதி, மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, கோகுல் இயக்கத்தில் ‘ஜுங்கா’, மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதக்காதி’, ’96’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

இதற்கிடையே அவர், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கன்னடப் படம் ஒன்றிலும் வில்லனாக நடிக்க சம்மதித்திருக்கிறார். ஷிவ் கணேஷ் எனபவர் இயக்கும் ‘அக்காடா’ என்ற படத்தின் மூலமாக கன்னடப் பட உலகத்தில் காலடியெடுத்து வைக்கும் விஜய் சேதுபதி, இதில் ஹீரோவாக நடிக்கும் வசந்த் விஷ்ணு என்பவருடன் மோதும் வில்லனாக வருகிறார். 

தமிழைத் தொடர்ந்து, சிரஞ்சீவியின் ‘சாய் ரா நரசிம்மரெட்டி’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்திலும் அறிமுகமாகும் விஜய் சேதுபதி, இப்போது கன்னட பட உலகத்துக்கும் செல்கிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close