’புருவ அழகி’யின் சம்பளம் ரூ.1 கோடி!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 08:15 pm

priya-prakash-warrior-salary-is-rs-1-crore

சமூக வலைதளங்களில் வைரலான ’புருவ அழகி’ ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு, விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்!  

’ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் நடித்துள்ள ப்ரியா பிரகாஷ் வாரியர், அதில் இடம்பெற்ற ’மாணிக்க மலராய பூவே...’ என்கிற பாடலில் தனது புருவங்களை வளைத்து நெழித்து அபிநயம் காட்டி கண் சிமிட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக மாறியது! இதன் மூலமாக ஒரே நாளில் பிரபலமானார் ப்ரியா! இதனால் ப்ரியாவுக்கு, சினிமா மற்றும் விளம்பரப் பட வாய்ப்புகள் குவிகின்றன. 
சமீபத்தில், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தை புரமோட் பண்ணும் விளம்பரப் படத்தில் நடிக்க, பிரியா வாரியருக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதில் நடிப்பதற்காக ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்!

இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் ஒரு அறிமுக நடிகை, இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெறுவது மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது! 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close