மலைக்கள்ளன் ஆனது காயம்குளம் கொச்சுன்னி!

  பால பாரதி   | Last Modified : 12 Jul, 2018 04:57 pm

the-dubbing-in-tamil-is-kayamkulam-kochunni

மோகன்லால், நிவின்பாலி நடித்திருக்கும் 'காயம்குளம் கொச்சுன்னி'  மலையாளப் படம் எம்.ஜி.ஆர். படத் தலைப்பைத் தாங்கி தமிழுக்கு வருகிறது!  

சரித்திர நாயகர்களோ, அல்லது சரித்திரத்தில் இடம்பெற்ற சாமான்ய மானவர்களோ, அவர்களின் வாழ்க்கை எந்த மொழியில் திரைப்படமாகி வந்தாலும் அதை வரவேற்கத் தயாராகவே இருப்பார்கள் ரசிகர்கள்! 

அந்த வகையில், கேரளாவில் வாழ்ந்த, 'இருப்பவர்களிடத்தில் கொள்ளையடித்து, அதை இல்லாதவர்களுக்கு கொடுத்த' காயம்குளம் கொச்சுன்னி என்பவரின் வாழ்க்கை, ’காயம்குளம் கொச்சுன்னி’ என்கிற பெயரிலேயே திரைப்படமாக தயாராகி வருகிறது. இதில் காயம் குளம் கொச்சுன்னியாக நிவின் பாலி நடிக்கிறார். கொச்சுன்னியின் நண்பராக சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால் நடிக்கிறார். ப்ரியா ஆனந்த், ப்ரியங்கா திம்மேஷ் இருவரும் நாயகிகளாக வலம் வருகின்றனர். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் இந்தப் படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரித்து வருகிறது. 

 

தமிழிலும் மொழி மாற்றம் ஆகிறது! சரித்திரக் கதையான ’பாகுபலி’, நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையான ’நடிகையர் திலகம்’ படங்களுக்கு அழகு தமிழிலில் வசனமும், பாடல்களும் எழுதிய மதன் கார்க்கி,‘காயம் குளம் கொச்சுன்னி’ படத்தின் வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார். 

’இருப்பவர்களிடத்தில் கொள்ளையடித்து, அதை இல்லாதவர்களுக்கு கொடுத்த’ ’ராஃபின் ஹூட்’ போல எம்.ஜி.ஆர். நடித்த 'மலைக்கள்ளன்' என்ற தலைப்பை இந்த படத்துக்கு வைப்பது பொருத்தமாக இருக்கும் எனவும் ஆலோசனை கூறியிருக்கிறார் மதன் கார்க்கி! ஆகவே, எம்.ஜி.ஆர். பட தலைப்போடு தமிழுக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது 'காயம்குளம் கொச்சுன்னி' ! 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close