ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டருக்கு செருப்படி... தில்லான 'ஓ போடு' நடிகை!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Jul, 2018 05:31 pm

slap-to-the-director-shooting-spot

வில்லு பாட்டுக்காரன் படத்தில் ’கலைவாணியோ ராணியோ...’ என ராமராஜனை மயங்க வைத்து, நாட்டாமை படத்தில் ’டீச்சராய்’ வந்து இளசுகளை கிறங்கடித்து, காதல் கோட்டையில் ’பிஞ்சு வெள்ளரிக்காய்’ விற்று, தமிழ் சினிமாவில் ’உலுக்கி வைச்ச கோகோகோலா போல’  சுதியேற்றிய ’ஓ போடு ராணி’ யை அத்தனை எளிதில் மறந்து விடமுடியுமா..?

அவருக்கு இப்போதென்னவாம்..?

அக்கட தேசத்தில் குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்டார். கல்லூரியில் படிக்கும் வயதில் மகள் இருக்கிறார் அவருக்கு... இந்த நிலையில்தான் தன்னிடம் தமிழ் பட இயக்குநர் ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில்  தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், அவரை செருப்பால் அடித்து விட்டு படத்தில் நடிப்பதையே நிறுத்தி விட்டதாகவும் இப்போது ஒரு வார இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார். 

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர்,  தெலுங்கு படமான `ஊ ல ல' வில் அம்மா கேரக்டர்ல நடிச்ச எனக்கு, சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைச்சது. இந்தப் படம் தமிழ்ல ரீமேக் ஆச்சு. ஆனா, சரியாப் போகலை. இதுக்கிடையில ஒரு இயக்குநர் தமிழ்ல நடிக்கக் கூப்பிட்டார். அவர் என்னை அப்ரோச் பண்ண விதமே சரியில்ல. நடிக்க முடியாதுனு மறுத்தேன். தொடர்ந்து வற்புறுத்தியதால ஷூட்டிங் போனேன். அங்கே அவர் நடந்துகிட்டது எனக்கு கோபத்தை ஏற்படுத்திடுச்சு. ஷூட்டிங்ல எல்லோருக்கும் முன்னாடி அவரை அறைஞ்சுட்டு வந்துட்டேன். அதுக்குப் பிறகு எந்தத் தமிழ்ப் படங்களிலும் நடிக்கலை’’ என்கிறார் ராணி. 

சமீபத்தில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை தமிழ் இயக்குநர் ஒருவர் பயன்படுத்திக் கொண்டார். நேரம் வரும்போது அவரைப்பற்றி வெளிப்படுத்துவேன் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்து இருந்தார். அதன் பிறகு யார் அந்த இயக்குநர் என கோடம்பாக்கமே சல்லடை போட்டு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் ஓபோடு ராணியும் தனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு இயக்குநர் தொல்லை தருவதாக கூறியிருப்பதால் மீண்டும் ஒரு ஆராய்ச்சிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். 

ஆழமான ஆராய்ச்சியாய் இருக்கட்டும்... ஏனென்றால் அவர் ஓ போடு ராணியாயிற்றே..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close