வச்சு செஞ்ச ’தமிழ்படம் 2’: வைரல் ஆன போஸ்டர்களின் தொகுப்பு...

  பால பாரதி   | Last Modified : 11 Jul, 2018 06:35 pm

tamilpadam-2-movie-release-tommorrow

தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு சூப்பர் ஹிட் அடித்த படங்களை கலாய்த்து கழுவி ஊத்தியதாலேயே ஓடியது ’தமிழ் படம்’! ’மிர்ச்சி’ சிவா நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010 -ல் வந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை அதே டீம் தற்போது உருவாக்கியுள்ளது! இந்த முறை சினிமாவோடு சேர்த்து, தற்போதைய அரசியல் நிலவரங்களையும் நையாண்டி செய்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்!

ஒரு சாமாதி முன் அமர்ந்து சிவா தியானம் செய்வதைப் போன்ற ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ’கலாய்’யை ஆரம்பித்த ’தமிழ் படம் 2’ படக்குழுவினர், பிறகு உள்ளூர் அரசியல்வாதிகளையும் தாண்டி, உலக அரசியல்வாதியான ட்ரப்பையும் விட்டுவைக்கவில்லை! 

அத்துடன் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஷால், விஜய்காந்த், சிம்பு என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரின் லேட்டஸ்ட் படங்களையும் கிண்டலடித்து, தனித்தனி போஸ்டராக வெளியிட்டு வெறுப்பேத்தியுள்ளனர். 

ரஜினியின் ’காலா’ படத்தை கலாய்க்கும் வகையில் படத்தின் நாயகன் சிவா, ஸ்டைலா கெத்தா சேரில் உட்கார்ந்தபடி டைனோசரை தடவிக் கொடுப்பது போன்ற ஒரு போஸ்டரை வெளியிட்டபோது, அது சமூக வலைதளங்களில் வைரலாக மாறியது! 

அதேபோல, காமெடி நடிகரான சதீஷ் ’விஸ்வரூபம்’ கமல் கெட்டப்பில் இருக்கும் போஸ்டரையும் வெளியிட்டு கிண்டல் செய்தபோது அந்த போஸ்டரும் ட்ரெண்டிங் ஆனது!   

விஜய் மிகவும் சீரியஸாக லேப் டாப்பில் எதையோ தேடுவதைப் போன்று வெளியிடப்பட்ட ’சர்க்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, சைக்கிள் ரிக்‌ஷாவில் சென்றபடி இருக்கும் சிவா, லேப் டாப்பில் மும்முரமாக தேடுவதைப் போன்ற போஸ்டர் வெளியிட்டு கலாய்த்தனர்.

அஜித்தின் ’விவேகம்’ படத்தை கலாய்க்கும் விதத்தில் பின்னங்கைகள் கட்டப்பட்ட நிலையில், சிவாவின் முதுகில் மரக்கட்டையை கட்டி சித்ரவதைப்படுவது போன்ற போஸ்டர்..,

படத்துக்கு ’யு’ சான்றிதழ் கிடைத்ததை சொல்லும் விதமாக ராட்சத வடிவத்திலான ’U’ என்கிற ஆங்கில எழுத்தை சிவா தோளில் சுமந்து வருவதுபோன்ற போஸ்டரில் ’பாகுபலி’ படத்தை கலாய்த்திருந்த போஸ்டரும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.
 

விக்ரம் பீரில் முகம் கழுவும் ’சாமி’, விஷால் தொப்பி அணிந்து டிடெக்டிவாக நடித்திருக்கும்’துப்பாறிவாளன்’, இந்திய சினிமாவில் முதல் விண்வெளி படமான ஜெயம் ரவியின் ’டிக் டிக் டிக்’, பழம்பெரும் நடிகையான சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ’நடிகையர் திலகம்’ போன்ற படங்களும் ’தமிழ் படம் 2’ படக்குழுவிடம் தப்பவில்லை! 

அழிச்சாட்டியதை இத்துடன் நிறுத்தாமல்,நேற்று முன்தினம் தலைப்பு அறிவிக்கப்பட்ட சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ’மாநாடு’ படத்தையும், நேற்று இரவு வெளியான ரஜினியின் ’2.0’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பையும் விட்டு வைக்கவில்லை!

’சின்னகவுண்டர்’, ’தேவர் மகன்’ என்று பழைய படங்களில் இருந்து நேற்று வெளியான ’2.0’ அறிவிப்பு வரை எல்லாத்தையும் வச்சு செய்த அமுதன்,  ஹாலிவுட் படங்களையும் விட்டுவைக்கவில்லை.

தமிழ் சினிமா ரசிகர்களின் அபிமான நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் போஸ்டர் விளம்பரத்திலேயே வச்சு செஞ்ச  ‘தமிழ் படம் 2’ திரைப்படம் நாளை ரிலீஸ் ஆவதால், கோலிவுட் வட்டாரம் பீதியாகி உள்ளது! 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close