• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

ஸ்ரீரெட்டி சொன்ன தமிழ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்? பகீர் தகவல்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Jul, 2018 06:54 pm

srirty-director-ar-murugadoss-is-complaint

ஆந்திரப் படவுலகமே  நடிகை ஸ்ரீரெட்டியால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. முன்னணியிலிருக்கும் பலரையும் சுட்டிக்காட்டும் அவர, தன்னுடன் படுக்கையை  பகிர்ந்து கொண்ட  அத்தனை பேருக்கும் சாட்சிகளை கைமேல் வைத்துள்ளதாக கூறிவருகிறார். நடிகர், நானி, தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் சகோதரர் என தொடர்ந்து பலரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி வருகிறார்.  இந்த நிலையில்தான் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு மாநில எல்லையை தாண்டி, தமிழக எல்லைக்கும் வந்து சேர்ந்தது. 

“தமிழ்ப்பட இயக்குநர் ஒருவரும் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நேரம் வரும்போது கூறுவேன்” என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து யாராக இருக்கும்  என கோடம்பாக்கத்தில் கிளிஜோசியம் பார்க்காத குறைதான்.  இதோ ஸ்ரீரெட்டியே அந்த ரகசியத்தை தனது முகநூல் பக்கத்தில் உடைத்து விட்டார். ‘என்ன முருகதாஸ் சார், க்ரீன்பார்க் ஹோட்டல் நியாபகம் உள்ளதா? வெளிகொண்டா ஸ்ரீவாசலு மூலம் சந்தித்தோம்.. நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, அங்கு நிறைய....’ என்று டுவிஸ்ட் வைத்துள்ளார், மேலும் ‘நீங்கள் கூட சிறந்த நபர் சார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கெனவே விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும்வேளையில், ஸ்ரீரெட்டியின் இந்தப்பதிவு தமிழ் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close