விவேக் படத்தை பராட்டிய கேரள அமைச்சர்!

  Bala   | Last Modified : 11 Jul, 2018 08:36 pm

vivek-s-movie-is-the-portrait-of-kerala-minister

விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எழுமின்’ படத்தை, கேரள அமைச்சர் வியந்து பாராட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கும் விவேக், காமெடியில் மட்டுமல்லாமல் குணசித்திர நடிப்பிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார். தவிர, ’நான் தான் பாலா’,’மகனே என் மருமகனே’போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக், ‘எழுமின்’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக தேவயானி நடித்துள்ளார். மேலும் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை வையம் மீடியாஸ் தயாரிக்க, வி.பி.விஜி இயக்கியிருக்கிறார். 

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிப் பேசும் ’எழுமின்’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து வியந்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.சி.மொய்தீன் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் உள்துறை செயலாளர் ஜெயராஜன் ஆகியோர் ’சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து எடுக்க வேண்டும்’என உற்சாகப்படுத்தி, படக் குழுவினரை பாராட்டியிருக்கிறார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close