சிம்புவின் துணிச்சல் விஜய்க்கு இல்லையா? திரையுலகினர் வேதனை

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Jul, 2018 08:10 pm

simbu-does-not-have-a-brave-vijay

சர்கார் பட போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போல ஒரு போஸ் கொடுத்திருந்தார். அதற்கு  பத்து கோடி ரூபாயை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக  வழங்கக்கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பது பழைய செய்திதான். 

அந்த படத்தை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற வலைப்பக்கங்களிலிருந்து உடனே நீக்க வேண்டும் என்று நீதிமன்றம், சன் பிக்சர்சுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து அவை நீக்கப்பட்டன. அத்தோடு முடிவுக்கு வந்ததா விவகாரம்?  சன் பிக்ர்சஸ், முருகதாஸ், விஜய் மூவரும் இணைந்து முப்பது கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுக்க, இன்னும் இரண்டு வாரத்திற்குள் மூவரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். அதன்படி நோட்டீஸும் அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. 

இப்படியொரு பிரச்னை ஏற்பட்ட நேரத்தில், ஒருவர் கூட முன் வந்து “இது தப்பு. படத்துல தம்மடிப்பது போல கேரக்டர் இருந்தா அதை வச்சுதானே ஆகணும்?” என்றெல்லாம் வாதாடவே இல்லை. அவருக்கு வந்தது அவரவருக்கு என திரையுலகினர் ஒட்டுமொத்தமாக மவுனமாகி விட்டனர்.

முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜீத், விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட எவரும் வாயே திறக்கவில்லை. நடிகர் சங்கம், மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் விஷால், இந்த விவகாரத்தில் மறந்தும் கூட மூச்சுவிடவில்லை. அவ்வளவு ஏன்? சம்பந்தப்பட்ட விஜய் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் சிம்புவும், அவரது அப்பா டி.ராஜேந்தரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள். 

சர்கார் போஸ்டர் விவகாரத்தை கிளப்பி விட்டதே அன்புமணி ராமதாஸும் அவரது தந்தை மருத்துவர் ராமதாஸும்தான். அவர்களை விவாதத்திற்கு தில்லாக அழைத்திருக்கிறார் சிம்பு. ’’பாபா முதல் தற்போது விஜய் நடித்து வரும் `சர்கார்’ படத்தின் முதல் போஸ்டர் வரை `புகைபிடிக்கும் காட்சிகள் ஏன் வருகின்றன’ என்ற கேள்விகள் அதிகம் வருகிறது.

அங்கிள் அன்புமணி ராமதாஸ்கூட இதைப் பற்றிப் பேசியிருந்தார். தற்போது இதுகுறித்து நான் இங்கு பேசினால், அது தப்பாகிவிடும். எந்த விவாதத்திலும் நான் கலந்துகொள்ளத் தயார் என்று அன்புமணியே கூறியிருந்தார். எனவே ஒரு விவாத மேடையில், இதுகுறித்து அங்கிள் அன்புமணி கேட்க நினைக்கும் கேள்விகளைக் கேட்டால், சினிமா தரப்பிலிருந்து கூறவேண்டிய பதில்களை நான் நேரலையில் கூறத் தயாராக உள்ளேன். மக்கள் மத்தியில் கலந்துரையாடுவதுதான், இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு அன்புமணி அங்கிள் ஒப்புக்கொண்டு அதற்கான நேரம் மற்றும் இடத்தை அவரே கூறினால், அங்கு நான் வரத் தயாராக உள்ளேன். தொடர்ந்து சினிமா பற்றிய விமர்சனங்கள் எழுவதுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.’’ என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார் சிம்பு.


சிகரெட் போஸ்டர் நல்லதா? கெட்டதா? என பொங்குகிற பொதுநலவாதிகள் ஒருபக்கம்  இருக்கட்டும்... யாருக்கு வந்தால் எனக்கென்ன என்கிற போக்கு சினிமாவுலகத்தில் இருக்கும் வரை, மூக்கை நுழைத்து முஷ்டியை தூக்குவார்கள். இதை உணர்ந்த சிம்பு, சர்கார் படத்திற்காக குரல் கொடுத்திருக்கிறார். 

இவருக்கு இருக்கிற துணிச்சல் விஜய்க்கு கூட இல்லாமல் போயிற்றே... என வேதனைப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close