ரஜினியை பொறாமைப்பட வைத்த விஐபி!

  Bala   | Last Modified : 13 Jul, 2018 07:06 am

rajinikanth-says-only-working-people-can-not-progress-in

கல்வியாளர் ஏ.சி.சண்முகத்தைப் பார்த்து ஒரு விஷயத்தில் பொறாமைப்பட்டுள்ளார் ரஜினி! 

டாக்டர் பட்டம் பெற்றுள்ள கல்வியாளர் ஏ.சி.சண்முகத்துக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ரஜினி பேசுகையில்,  

“பல கல்வி நிறுவனங்களுக்கு அதிபராக இருக்கிறார் ஏ.சி.சண்முகம், அதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அந்த உழைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால்,உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும், நல்ல மனமும் இருந்தால் தான் முன்னேற முடியும்.

ஏ.சி.சண்முகத்திடம் எனக்கு பிடித்த இன்னொரு விஷயமும் இருக்கிறது! அவரின் தலை அலங்காரம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது! இப்பவும் அடர்த்தியான முடியோடு இருக்கும் அவரை பார்க்கும்போது எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது! நானும் அவரைப் போல முடியை வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது!” என காமெடியாகப் பேசினார் ரஜினி. 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close