’பிக் பாஸ்' ஐஸ்வர்யாவுக்காக ஆதங்கப்பட்ட ஹீரோ!

  Bala   | Last Modified : 13 Jul, 2018 07:20 am

mpme-movie-press-meet

’பிக் பாஸ்' ஐஸ்வர்யாவும், அஞ்சனாவும் கூப்பிட்டதும் வர்ற இடத்தில் இல்லையே? என பிரஸ் மீட்டில் தனது ஆதங்கத்தைக் கொட்டினார் நடிகர் துருவா.  

’பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்திருக்கும் படம் ’மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’. இதில், ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக அஞ்சனா பிரேம் இருக்கிறார். 

இவர்களுடன் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மனோபாலா,  மைம் கோபி, அருள்தாஸ்,  ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே உள்ளனர். இந்தப் படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, அச்சு இசையமைத்துள்ளார். எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் - ஆர்.ரம்யா தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ளார். 

வரும் ஜூலை 27ல் படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் படக்குழுவினர், பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது நாயகன் துருவா பேசும்போது, "சென்சாரில் சான்றிதழ் கொடுக்க மறுத்து, அது பத்திரிகை மூலமா செய்தியா வெளியான போது தான் இப்படி ஒரு படம் இருக்குன்னே வெளியே தெரிஞ்சது. டைரக்டர் ராகேஷ் மத்த எல்லா யூனியன்லேயும் கார்டு வாங்குற அளவுக்கு எல்லா வேலையையும் இறங்கி செஞ்சாரு. 

ஹீரோயின் இல்லாம நடக்குற சினிமா ஃபங்ஷன் இதுவா தான் இருக்கும்! என்ன பண்றது? கூப்பிட்டதும் வர்ற இடத்தில் ஹீரோயின்ஸ் இல்லையே? இதில் நடித்த ஒரு கதாநாயகி அஞ்சனா பிரேம் ஜப்பான்ல இருக்காங்க, அவங்க கூட, கூப்பிட்டிருந்தா வந்திருப்பாங்களோ என்னவோ? ஆனா, இன்னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா, ‘பிக் பாஸ்’ வீட்டுல இருக்காங்க, எப்ப வருவாங்களோ யாருக்கு தெரியும்?” என தனது ஆதங்கத்தைக் கொட்டினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close