கார் காதலர் அஜித் வீட்டுக்கு புதுவரவு... வைரலாகும் புகைப்படம்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 12 Jul, 2018 08:32 pm

car-lover-ajith-home-remedies-vairal-photo

நடிகர் அஜித் புதிதாக வாங்கியுள்ள வோல்வோ காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிப்பு மட்டுமல்லாது கார் ரேஸ், பைக் ரேஸ்களில் கலந்து அசத்தியவர் நடிகர் அஜித். 2003ம் ஆண்டு சர்வதேச அளவில் நடைபெற்ற பார்முலா ஏசியா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2010ல் நடைபெற்ற பார்முலா 2 கார் பந்தயத்திலும் பங்கேற்றவர். பைக் ரேஸ்களில் கலந்து கொண்ட அவர் பல விபத்துகளில் சிக்கி 15க்கும் மேற்பட்ட ஆபரேசன்களை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். 


கார் ரேஸராக இருப்பினும் மாருதி ஸ்விப்ட் கார் மட்டுமே அவரது விருப்பமாக இருந்தது. வெளியில் சென்றாலும் அந்த காரில்தான் சென்று வந்தார். இந்நிலையில், புதிதாக வோல்வோ காரை வாங்கியுள்ளார்.

கார் டெலிவரி செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், காரின் ஆர்சி புக்கையும் புகைப்படம் எடுத்த அவரது ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close