பிரபாஸின் சாஹோ அப்டேட்ஸ்!

  திஷா   | Last Modified : 13 Jul, 2018 07:30 am

prabhas-s-saaho-update

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் ஃபேவரிட் நடிகராகி விட்டார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். பாகுபலியின் 2-வது பாகத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் 4 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. பிரபாஸின் 19-வது படமான இதனை சுஜீத் இயக்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் இதில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். 

 ‘கத்தி’ பட வில்லன் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஜாக்கி செராஃப்,  மந்திரா பேடி உட்பட பலரும் நடிக்கிறார்கள். ம். 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஷங்கர்-எஸ்ஸான்-லாய் இசையமைக்கிறார்கள். 

சமீபத்தில், இந்தப் படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு அபு தாபியில் நிறைவடைந்திருக்கிறது. இதனையடுத்து சாஹோ படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. அதோடு விரைவில் படத்தின் ட்ரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம் படக் குழுவினர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close