தமன்னாவின் அடுத்தப் படம்!

  திஷா   | Last Modified : 12 Jul, 2018 08:42 pm
tamanna-joins-f2

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் 'டச் சேசி சூடு' படத்திற்கு பிறகு இயக்குநர் அணில் ரவிபுடி தனது அடுத்தப் படத்தைத் தொடங்கி விட்டார். இதற்கு ‘F2’ (Fun & Frustration) எனப் பெயரிடப் பட்டுள்ளது. இரண்டு ஹீரோ கதை களம் கொண்ட இந்தப் படத்தில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இணைந்து நடிக்கிறார்கள்.

இதில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னாவும், வருண் தேஜ்ஜுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடாவும் நடிக்கிறார்கள். ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சமீபத்தில், டொடங்கிய இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்த இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடிகைகள் தமன்னா, மெஹ்ரீன் இருவருமே கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை நடிகை மெஹ்ரீன் தனது ட்விட்டரில் தமன்னாவுடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பதிவிட்டு உறுதிப் படுத்தியுள்ளார். 
அதோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப் படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close