புது வரவு : கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’!  

  Bala   | Last Modified : 12 Jul, 2018 07:06 pm

new-arrivals-kadaikutty-singam

இந்த வாரத்தில் கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’, சிவாவின் ’தமிழ் படம் 2’ என இரண்டே படங்கள் தான் களத்தில் இறங்குகிறது!ஆனால், ’கலாய்’ நாயகன் சிவாவின் ’தமிழ் படம் 2’ ஒரு நாள் முந்தி, இன்றே திரைக்கு வந்துவிட்டது!    

கடைக்குட்டி சிங்கம் : ’பருத்தி வீரன்’ படத்தின் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமாகி, குக்கிராமங்கள் வரை கொண்டு போனதால் கார்த்தியை பொருத்தவரை, கிராமியக் கதைகள் அவருக்கு கை கொடுக்கும்! 

அந்த வகையில், விவசாயத்தின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசும் விதமாக இயக்குநர் பாண்டிராஜ் உருவாக்கியிருக்கும் ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கெத்து காட்டும் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தை நடிகர் சூர்யா, தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின் மெண்ட்’ மூலம் தயாரித்திருப்பதோடு, கெஸ்ட் ரோலில் வந்து கலக்கியிருக்கிறாராம்.

இதில் கார்த்தி, சயிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி, மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது! டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் நாளை (ஜூலை 13) திரைக்கு வருகிறது.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close