கோலமாவு கோகிலாவுக்கு அடுத்த மாசம்தான் டைம்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Jul, 2018 08:36 pm
kolamaavu-kokila-releasing-on-aug-10

நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வரவுள்ள கோகோ எனும் கோலமாவு கோகிலா படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்து சிவகார்த்திகேயன் பாடல் வரியில் அமைந்த ”கல்யாண வயசு தான்” பாடல் இணையத்தில் ட்ரெண்டானது மட்டுமல்லாது இளைஞர்களிடமும் வைரலானது.

இதனையடுத்து கடந்தவாரம் கோகோவின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை மிரட்டியது. பாட்டு மற்றும் ட்ரைலரிலே எதிர்ப்பார்ப்பை தூண்டிய இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜேக்குலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தை லைகா புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. கோகோ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருவதாக லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close