சூப்பர் ஸ்டார் படத்தில் நஸ்ரியாவின் கணவர்!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 11:21 am

fahadh-to-act-in-rajini-movie

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் மலையாள நடிகரும் நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

'காலா' படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்க உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.இதில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்பட்டது.  தற்போது டார்ஜிலிங்கில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து நேற்று முன்தினம் ரஜினி சென்னை திரும்பினார். 

இந்நிலையில், இந்தபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பகத் படக்குழுவுடன் இணைய உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் ரஜினிக்கு நண்பராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்தவர் பகத் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close