சிவகார்த்திகேயனின் புதிய படம் தொடங்கியது!

  Shalini   | Last Modified : 14 Jul, 2018 04:18 am

sivakarthikeyan-starts-shooting-for-rajesh-s-film

சென்னன்: ‘சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே போன்ற காமெடி படங்களை இயக்கியவர் இயக்குநர் எம்.ராஜேஷ். ஆனால் கடைசியாக இவர் இயக்கிய வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு போன்ற படங்கள், எதிர்ப்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். 

பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்தின் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இது சிவகார்த்திகேயனின் கரியரில் 13-வது படம். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். காமெடிக்கு சிவாவின் நண்பர் சதீஷ் கமிட் ஆகியிருக்கிறார். 

சமீபத்தில், படத்திற்கான பூஜை போடப்பட்டது. நேற்று இதன் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. மறுபுறம் சிவகார்த்திகேயன் சீமராஜா ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அதோடு இவரின் முதல் தயாரிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கனா படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close