மடோனாவுக்கு மாறிய விஜய் சேதுபதி!

  பால பாரதி   | Last Modified : 13 Jul, 2018 06:07 pm

junga-press-meet-vijay-sethupathi-speech

'என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன்' என ’ஜுங்கா’ பட பிரஸ் மீட்டில் கூறினார் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரடெக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் அருண்பாண்டியனுடன் இணைந்து ’ஜுங்கா’ படத்தை தயாரித்திருக்கிறார். முழுக்கு முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் ’கஞ்சத்தனமான டான்’ கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதில் அவருக்கு ஜோடிகளாக சாயிஷா, மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கோகுல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். 

இந்தப் படம் ஜூலை 27ல் ரிலீஸ் ஆவதையொட்டி ’ஜுங்கா’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது விஜய் சேதுபதி பேசுகையில்,”இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது, இயல்பானது. ஆனால், எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தது தான் ஆச்சரியமான விசயம். படத்தின் கதையை கேட்காமலே தயாரிப்பில் இணைந்தார். இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். 

சரண்யா பொன்வண்ணன் ஒரு சீனியர் நடிகை, ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தின் போது அவர் காட்டிய அக்கறை காடிய விதமும், இதில் அவர் வடசென்னை ஸ்லாங் பேசுவதில் காட்டிய முயற்சியும், அவர் சினிமாவை எவ்வளவு தூரம் நேசிக்கிறார் என்பதை உணர்த்தியது. 

மடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை உள்ளது. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்றவுடன் உடனே சம்மதித்தேன். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து, நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி”என்றார்.

இந்த விழாவில் அருண் பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close