'அகோரி 'யாக மாறிய தமிழ் நடிகர்! - ரசிகர்கள் அதிர்ச்சி  

  Bala   | Last Modified : 13 Jul, 2018 05:04 pm

shayaji-shinde-became-the-ahori

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே’அகோரி’ என்கிற படத்தில் சிவனடியார் எனப்படும் அகோரியாக நடிக்கிறார். 

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் கதையான ’பாரதி’ திரைப்படத்தில் பாரதியாராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான சாயாஜி ஷிண்டே, பிறகு அஜித்தின் ’பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் ஜோதிகாவுக்கு தந்தையாக நடித்தார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகோரி 'என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சாயாஜி ஷிண்டே. சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் நடக்கும்  போராட்டத்தைச் சொல்லும் இந்தப் படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் நாயகியாக நடிக்கிறார். மேலும் மைம் கோபி, சித்து, டார்லிங் மதன கோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகின்றனர்.  

ஆர்.பி. பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி பாலாவும், மோஷன் பிலிம் பிக்சர்ஸ் சுரேஷ் மேனனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் இயக்குகிறார். 

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பிலிம் சிட்டியில் நடந்தது. அப்போது, ஹரிதுவார் போன்று மிகப் பிரமாண்டமான செட் அமைத்து, அதில் 150 அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி படமாக்கப்பட்டது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close