மாத இறுதியில் மிரட்டவரும் ஜூங்கா!

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Jul, 2018 07:53 pm

junga-release-date-announced

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும்  “ஜூங்கா” வரும் 27ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைக்கோர்த்து ‘ஜூங்கா’ படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே, இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்குவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஜய்சேதுபதியின் ‘96’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து தனது அடுத்த படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்து ரசிகர்களுக்கு டபூள் விருந்து படைத்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close