மொட்டை ராஜேந்திரனும் ஹீரோவானார்!

  பால பாரதி   | Last Modified : 14 Jul, 2018 03:53 pm

mottai-rajendran-became-a-hero

காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன், ’கருப்பு காக்கா’ என்கிற படத்தில்  ஹீரோ அவதாரம் எடுக்கிறார்.

காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறிவது தமிழ் சினிமாவுக்கு புதிதில்லை! என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், சந்திரபாபு, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் போன்றவர்கள் அந்தக் காலத்திலேயே ஹீரோவாக மாறிருக்கின்றனர்.  கவுண்டமணி, விவேக், கருணாஸ், சந்தானம் போன்ற இந்தக் காலத்துக் காமெடியன்களும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளனர். இவர்கள் வரிசையில் காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரனும் ஹீரோவாக மாறியிருக்கிறார்!   

சினிமாவில் ஃபைட்டராக இருந்த மொட்டை ராஜேந்திரன், இயக்குநர் பாலாவின் ’நான் கடவுள்’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். இப்போது அவர், காமெடியனாக கலக்கி வருகிறார். இந்நிலையில், மொட்டை ராஜேந்திரன் ’கருப்பு காக்கா’ என்கிற படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். 

பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதப் போன ஒரு கதாசிரியரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, காமெடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் மொட்டை ராஜேந்திரன். இதில் டேனியல், ’ராட்டினம்’ சுவாதி, ஜார்ஜ் , அஞ்சலி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் விஜய்மில்டன் வெளியிட்டார். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close