கமல்ஹாசனுடன் மோதும் நயன்தாரா

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2018 10:30 pm
kamalhaasan-vs-nayanthara

கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ படமும், நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’ படமும் ஒரே நாளில் திரைக்கு வருகிறது!  

‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘விஸ்வரூபம் 2’ படத்தை உருவாக்கியுள்ள கமல்ஹாசன், ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்துடன்  இணைந்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக இப்படத்தை தயாரித்து, இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இதில் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். தீவிர அரசியல், பிக்பாஸ் போன்ற காரணங்களால் தாமதமான ’விஸ்வரூபம் 2’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வருகிறது! கமல்ஹாசனின் ’விஸ்வரூபம் 2’ படத்தோடு, நயன்தாராவின் ’கோலமாவு கோகிலா’ படமும் மோதுகிறது! 

லைகா நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ வில், நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் காமெடியன் யோகி பாபு. மேலும் இதில், நயன்தாராவை நினைத்து யோகிபாபு பாடுவது போன்ற ’கல்யாண வயசு’ என்கிற சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ’கோலமாவு கோகிலா’வில் கஞ்சா விற்கும் பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கிறார், என்கிற தகவல் சமீபத்தில் வைரலாக மாறி, படத்துக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது! 

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த படக்குழுவினர், கமல்ஹாசனின் ’விஸ்வரூபம் 2’ படம் ரிலீஸ் ஆகும் ஆகஸ்ட் 10 -ந் தேதியே, ’கோலமாவு கோகிலா’ படத்தையும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close