ஏடாகூடமாக நடந்து கொள்வாரோ..? கமல்ஹாசனால் கலங்கும் நயன்தாரா

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Jul, 2018 01:09 am
can-you-go-on-nayantara-who-is-bumped-by-kamal-hassan

படுபயங்கர பிசியாக இருக்கிறார் நயன்தாரா. சம்பளத்தை ஐந்தரைக்கோடி ரூபாயாக உயர்த்தியபோதும் அவரது வீட்டுக்கு படையெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆனாலும் ஒருவித சங்கடத்துடன் இருக்கிறார் நயன்தாரா. காரணம் கமல்ஹாசன்! 

இதுவரை கமல்ஹாசனுடன் அவர் இணைந்து நடித்ததில்லை. ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க கமிட் ஆனவுடன் நயன்தாரா  அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால், அதுவே அவருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்கு நிபந்தனையும் விதித்திருந்தார். தான் கொடுக்கும் கால்ஷீட் தேதிக்குள் தன்னுடைய போர்ஷனை முடித்து விடவேண்டும். அடுத்து நடிக்க தேதி ஒதுக்க முடியாது எனக் கூறியிருந்தார். அதே போல் கால்ஷீட் தேதிகளையும் ஒதுக்கிக் கொடுத்து விட்டார். 

ஆனால், இன்னும் பட வேலைகள் தொடங்கப்படுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. ஷங்கர் 2.0 ரிலீஸ் வேலைகளில் பிஸியாகி விட்டார். கமல் பிக்பாஸ், விஸ்வரூபம்-2, கட்சிப்பணிகள் எனக் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், நயன்தாரா ஒதுக்கித் தந்த தேதிகளில் படப்பிடிப்பு நடப்பதே சந்தேகம்தான். கமல்ஹாசனும், ஷங்கரும் கால்ஷீட் விவகாரத்தில் ஏடாகூடமாக நடந்துகொள்வார்களோ என்கிற கவலை நயனை நாள்தோறும் வாட்டுகிறதாம். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close