ரஜினியுடன் பகத் நடிக்கவில்லை: இயக்குநர் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2018 04:50 pm
fahadh-is-not-acting-in-rajini-movie-karthik-subbaraj

ரஜினியை வைத்து தான் இயக்கும் படத்தில் பகத் பாசில் நடிக்கவில்லை என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

காலா படத்திற்கு பிறகு ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மேகா ஆகாஷும் நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படபிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது. இதில் ரஜினி பேராசிரியராக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதனை தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close