இயற்கை இரக்கமற்றது: அழுத்தமான பேரன்பு டீசர்

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 12:38 pm
peranbu-teaser-gets-viral

மம்மூட்டி நடிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேரன்பு' படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றள்ளது. 

தரமணி படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் இயக்கி உள்ள படம் 'பேரன்பு'. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். கலைவானர் அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் மத்தியில் பேரன்பு படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியானது.

இந்தியாவின் மிக சிறந்த நடிகராக கருதப்படும் மம்மூட்டி நடித்திருப்பது, ராமின் இயக்கம், வெளியாவதற்கு முன்பே உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரம், யுவனின் இசை என பெரும் எதிர்பார்ப்புகள் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். 

'இயற்கை இரக்கமற்றது' என்று கூறும் மம்மூட்டியின் குரலோடு டீசர் தொடங்குகிறது. மம்மூட்டி கண்ணாடி முன் நின்று பக்கவாதம் வந்தவர் போல வாயையும் கையையும் வைத்துக்கொள்கிறார். சிறுது நேரத்தில் நார்மலாகிறார். படத்தின் போஸ்டர்களில் மம்மூட்டியின் மகளான நடித்திருக்கும் சாதனா பக்கவாதம் வந்தவர் போல நடித்திருப்பது தெரிகிறது. 

பின், "பாப்பா ஏன் மத்த குழந்தைங்க மாதிரி நடக்கலைன்னு பல வருஷமா வருத்தப்பட்ட எனக்கு பாப்பா மாதிரி நடக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான், ஒருத்தன நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லைனு கேக்குறது எவ்வளவு பெரிய வன்முறைனு புரிஞ்சது" என்று மம்மூட்டியின் குரல் மீண்டும் ஒளிக்க இயற்கை காட்சிகளுக்கு பின் பலத்த காற்றின் சத்தத்துடன் டீசர் முடிகிறது. 

இதற்கு முன்பே தங்கமீன்கள் படத்தில் மகள்- தந்தை உறவை பற்றி ராம் காட்டியிருப்பார். தற்போது மீண்டும் அந்த உறவை பற்றிய படம். மேலும் டீசரிலே யுவனின் இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. 4 பாடல்களும் டீசரை போல அழுத்தமாக இருக்கின்றன. இந்தாண்டு மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும்  'பேரன்பு'. டீசர் போல அழுத்தமாகவும் நிறைவாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close